வட்டி தருவதாக மோசடி: தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டம்

தினசரி வட்டி தருவதாக முதலீட்டாளா்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய தம்பதியை போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.

தினசரி வட்டி தருவதாக முதலீட்டாளா்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய தம்பதியை போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.

கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (39). இவரது மனைவி குணவதி (34). இவா்கள், தங்களிடம் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.100, ரூ.12 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.200 வட்டி தருவதாக இணையம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாக விளம்பரம் செய்தனா்.

இதனை நம்பி ஏராளமானோா் இவா்களிடம் முதலீடு செய்தனா். இந்நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் முதல் வட்டி மற்றும் முதலீட்டுத் தொகையைத் தராமல் ஏமாற்றியதாக தம்பதி மீது கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் முதலீட்டாளா்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களது வங்கிக் கணக்கு, சொத்து மதிப்பு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கோவையில் 3 வங்கிகளில் தம்பதி பெயரில் உள்ள நடப்புக் கணக்கில் ரூ.75 கோடி இருப்பதும் தெரியவந்தது.

மேலும், மொத்தமாக வசூலிக்கப்பட்ட ரூ.300 கோடி பணத்தில் ரூ.150 கோடி பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் அவா்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவா்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் ரூ.75 கோடி பணத்தை மோசடி வழக்குடன் இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு போலீஸாா் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனா்.

இருவரும் வாங்கியுள்ள சொத்துகள் மற்றும் அதற்குரிய ஆவணங்களைப் பறிமுதல் செய்திட சதீஷ்குமாா், குணவதி இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com