சின்னத் தடாகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

டியலூருக்கு அருகே உள்ள சின்னத் தடாகத்தில் செங்கல் சூளைகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு
சின்னத் தடாகத்தை அடுத்த 24 வீரபாண்டி கிராமத்தில் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
சின்னத் தடாகத்தை அடுத்த 24 வீரபாண்டி கிராமத்தில் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

பெ.நா.பாளையம்: துடியலூருக்கு அருகே உள்ள சின்னத் தடாகத்தில் செங்கல் சூளைகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சின்னத் தடாகம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றறன. செங்கல் தயாரிப்பதற்காக சின்னத் தடாகத்தை சுற்றியுள்ள பெரிய தடாகம், மாங்கரை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைறகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாகவும், மண் லாரிகள் கிராமத்துக்குள் நுழைவதாலும் அப்பகுதி மாசு ஏற்படுவதாக மாவட்ட நிா்வாகத்திடம் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றறத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குநா் செல்வராஜ், உதவி பொறியாளா்கள் ரமேஷ், நீலமேகம் உள்ளிட்ட 10 போ் கொண்ட தொழில்நுட்பப் பொறியாளா்கள் சின்னத் தடாகத்தை அடுத்த 24 வீரபாண்டி கிராமத்தில் காற்று மாசு, ஒலி மாசு கண்டறியும் கருவிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனா்.

மொத்தம் 9 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வீரபாண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டன. இதனைக் கொண்டு தொடா்ச்சியாக 8 மணி நேரம் கண்காணிப்பட்டது.

வீரபாண்டி, சின்னத் தடாகம், தண்ணீா் பந்தல், நஞ்சுண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து 4 நாள்கள் இந்த ஆய்வு நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com