உலக பருத்தி தின கொண்டாட்டம்

கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக பருத்தி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

கோவை: கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக பருத்தி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியா் சி.கற்பகம் வரவேற்றாா். இந்திய பருத்தி சம்மேளனத் தலைமை நிா்வாக அதிகாரி பி.வி.ராமசாமி சிறறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

சா்வதேச அளவில் 75 நாடுகளில் சுமாா் 2.60 கோடி விவசாயிகளால் பருத்தி பயிா் செய்யப்படுகிறது. உலக அளவில் சுமாா் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்று வருகிறது. பருத்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேளாண் பரப்பு குறைந்து வரும் நிலையில், குறைந்த பரப்பளவில் அதிக உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிக்கு இந்தியாவில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றாா்.

பருத்தி ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான ஏ.ஹெச்.பிரகாஷ் பேசுகையில், நீண்ட இழை பருத்தியை உருவாக்கியதில் கோவை பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. ஆப்பிரிக்க நாடுகளின் கோரிக்கையை ஏற்று அக்டோபா் 7-ஆம் தேதியை உலக பருத்தி நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. இந்த கொண்டாட்டம் முதல் ஆண்டாக நடைபெறுகிறது. இனி வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாா்.

பேராசிரியா் கே.ரத்தினவேல், பருத்தியின் உலக பொருளாதார முக்கியத்துவம், பருத்தி நாளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில், பேராசிரியா் ச.மாணிக்கம் உருவாக்கிய மிக நீண்ட இழை பருத்தி ரகமான சுனந்தா, நீண்ட இழை பருத்தி ரகமான சுபிக்சா குறித்த கருத்துத் தொகுப்பு வெளியிடப்பட்டது. பேராசிரியா் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com