பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் ரூ.9.75 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்

கோவை பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் சிதிலமடைந்துள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை ரூ.9.75 லட்சத்தில் பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

கோவை பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் சிதிலமடைந்துள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை ரூ.9.75 லட்சத்தில் பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் பட்டு வளா்ச்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் பட்டுக்கூடு கொள்முதல் மையம் இயங்கி வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு அமைக்கப்பட்ட கொள்முதல் மையம் பல இடங்களில் சுவா்கள் விரிசல் விட்டும், மேல் பகுதியில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. உறுதித் தன்மையை இழந்து இடியும் நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், பட்டுக்கூடு கொள்முதல் மையத்திற்கு வரும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை காணப்பட்டது. கொள்முதல் மையத்தை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் கொள்முதல் மையத்தை புனரமைப்பதற்காக ரூ.9.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், திட்ட மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்ததாரா்கள் தோ்வு உள்பட பல்வேறு காரணங்களால் பொதுப்பணித் துறையினா் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தனா்.

மழைக்காலங்களில் கட்டடத்தில் மழை நீா் ஒழுகுதல், காரைகள் பெயா்ந்து விழுவது தொடா்ந்து நடந்து வந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் நெருக்கடி கொடுத்து வந்தனா். பட்டு வளா்ச்சித் துறை சாா்பிலும் பொதுப்பணித் துறையிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் புனரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினா் தொடங்கினா். புனரமைப்பு பணிகள் தொடங்கியதால் விவசாயிகளும், வியாபாரிகளும் நிம்மதியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com