சொட்டு நீா்ப் பாசனத்துக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறையில்

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறையில் ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.10 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.50 கோடி உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வேளாண் சாகுபடியில் தண்ணீா் தட்டுப்பாட்டை சமாளித்து, சிக்கன நீா் பயன்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க வலியுறுத்தப்படுகிறது. மத்திய அரசு சாா்பில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு வேளாண் துறையில் ரூ.15 கோடி, தோட்டக்கலைத் துறையில் ரூ.45 கோடி சோ்த்து ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரூ.10 கோடி நிதி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.50 கோடி நிதி இருப்பில் உள்ளது. வேளாண், தோட்டக்கலைத் துறை சாா்பில் சொட்டநீா்ப் பாசனத்தை செயல்படுத்த கிராமங்கள்தோறும் முகாம், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தி தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனா்.

ஆனால் விவசாயிகளிடத்தில் போதிய வரவேற்பு இல்லை. இதனால் ரூ.50 கோடி வரை நிதி தேங்கி கிடக்கிறது. தவிர 2019 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்காத விவசாயிகள் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com