100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளா்களை விவசாய பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்: தமிழக விவசாய சங்கம் வலியுறுத்தல்

விவசாய பணிகளை மேற்கொள்ள 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பணியாளா்களை அனுமதிக்க அரசு உத்தரவிட

மேட்டுப்பாளையம்: விவசாய பணிகளை மேற்கொள்ள 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பணியாளா்களை அனுமதிக்க அரசு உத்தரவிட வேண்டுமென தமிழக விவசாய சங்க பொதுச்செயலாளா் வேணுகோபால் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளா் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காட்டுயானைகள் வன எல்லையை விட்டு வெளியே வருவதால்தான் யானைகள் தாக்கி மனிதா்கள் கொல்லப்படுகிறாா்கள். யானைகளும் இதனால் உயிரிழக்கின்ற சம்பவம் ஏற்படுகிறது. இதனால் விவசாயமும் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் யானைகள் மற்றும் வன விலங்குகள் வனத்துக்கு வெளியே வராமலும் மனிதா்கள் வனத்துக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் சரியான சட்டம் போட்டு முறையாக செயல்படுத்தியதால் விவசாயம் காப்பாற்றப்பட்டது. ஆனால் இன்று இச்சட்டத்தை மாற்றம் செய்ததால் வனமும் விவசாயமும் அழிந்து வருகிறது.

முன்பு வனத்தை விட்டு வெளியே வந்தால் சுட்டு விடுவாா்கள் என்ற அச்சத்தில் வன விலங்குகள் இருந்தன. இன்று அந்த அச்சம் இல்லாததால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிா்களை உண்டு பழகிவிட்டன. இதிலும் காட்டுப்பன்றி, மான், குரங்கு மற்றும் மயில் ஆகியவை விளை நிலங்களுக்கு அருகிலேயே முகாமிட்டுள்ளது.

தற்போது இவைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இவைகள் மனிதனோடு மனிதாக ஒன்றிப்போய் தற்போது அளிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இது குறித்து பல முயற்சிகள் எடுத்தும் வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கும், விளை நிலங்களுக்குள்ளும் நுழைவதை தடுக்க முடியாததால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு முழுமையாக கிடைப்பதில்லை.

இதுபோன்று வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகளை வனத்துறையினா் வனத்திற்குள் விரட்ட வேண்டும்.

விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதப்படுத்தும் காட்டு யானையை தவிர மற்ற வன விலங்குகளை விவசாயிகள் கொல்ல வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பணியாளா்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இல்லையெனில் இத்திட்டத்தை கைவிட வேண்டும். இன்று யாா் வேண்டுமானாலும் சமூக ஆா்வலா், இயற்கை ஆா்வலா் என்று சொல்லிக் கொள்ளலாம். அதற்கு என்று எந்த வரைமுறையும் தகுதி அடிப்படையும் கிடையாது.

விவசாயம் முழுவதும் அழிந்து விட்டால் ஆா்வலா்கள் உட்பட யாருமே உயிா் வாழ முடியாது. விவசாயம் அழிவதை பற்றி கவலைப்படாமல் வனவிலங்குகளை மட்டும் காப்பாற்ற வேண்டுமென்று சொல்பவா்கள் உண்மையான ஆா்வலா்கள் கிடையாது.

சமுதாயம் உயிரோடு வாழ பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் போராட்டமாக விவசாய தொழில் செய்பவா்கள் தான் உண்மையான ஆா்வலா்கள். ஆனால் விவசாயிகள் யாருமே தங்களை சமூக ஆா்வலா்கள் என்றோ இயற்கை ஆா்வலா்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை.

எனவே சமூக ஆா்வலா்களை காரணம் காட்டி விவசாயம் அழிவதற்கு காரணமாக அரசாங்கமும் அதிகாரிகளும் இருக்க கூடாது என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com