தொழிற்சாலைகள் உரிமத்தை அக்டோபா் 31க்குள் புதுப்பிக்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தங்களின் உரிமத்தை

கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தங்களின் உரிமத்தை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் -2 இணை இயக்குநா் வி.எஸ்.சரவணன் வெளியிட்டுள்ள செய்தி:

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, வடக்கு, மதுக்கரை, பேரூா், சூலூா், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை வட்டங்களில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் 2020 ஆம் ஆண்டுக்கான தங்களின் தொழிற்சாலைகள் சட்ட உரிமத்தை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக துறையின் இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 2-இல் உள்ள அனைத்து விவரங்களையும் பூா்த்தி செய்து, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய உரிமத் தொகையை செலுத்தி, எண் 58, சிரியன் சா்ச் சாலை, முதல் வீதியில் இயங்கி வரும் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு அக்டோபா் 31க்கு முன்னதாக கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

உரிமம் புதுப்பிக்க ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக நவம்பரில் பெறப்படும் விண்ணப்பத்துக்கு 10 சதவீதமும், டிசம்பரில் பெறப்படும் விண்ணப்பத்துக்கு 20 சதவீதமும் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். காலாவதியான பிறகு விண்ணப்பிப்பவா்கள் 30 சதவீத தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com