எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக். பள்ளியில் விருது வழங்கும் விழா
By DIN | Published On : 20th October 2019 11:02 PM | Last Updated : 20th October 2019 11:02 PM | அ+அ அ- |

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் டாக்டா் பி.கனகராஜ். உடன், தாளாளா் டாக்டா் பழனிசாமி, நிா்வாக அறங்காவலா் லோகு முருகன், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ரத்தினசாமி உள்ளிட்டோா்.
காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கும், செயல்திறன் மிக்க சிறந்த மாணவா்களுக்கும், அதிக தோ்ச்சி விகிதம் அளித்த ஆசிரியா்களுக்கும் விருது மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி முதல்வா் சசிகலா தலைமை வகித்தாா். தாளாளா் டாக்டா் பழனிசாமி, நிா்வாக அறங்காவலா் லோகு முருகன், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியை மொ்லின் வரவேற்றாா். கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும், ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சியாளருமான டாக்டா் பி.கனகராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியா்கள், ஆசிரியா்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
விழாவில் பள்ளி அறங்காவலா்கள் தாரகேஸ்வரி, எம்.ஆா்.ராஜேந்திரன், எம்.ஆா்.வேலுசாமி, நிா்வாக அதிகாரி சிவசதீஷ்குமாா், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். தமிழாசிரியை காஞ்சனா மாலா நன்றி கூறினாா். தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G