முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அலங்கார விளக்குகளிலிருந்து மின்சாரம் பாய்ந்து வாடிக்கையாளா் காயம்
By DIN | Published On : 24th October 2019 07:50 PM | Last Updated : 24th October 2019 07:50 PM | அ+அ அ- |

மதுக்கரை: கோவை சுந்தராபுரம் அருகே தனியாா் துணிக்கடையில் இருந்த அலங்கார விளக்குகளிலிருந்து மின்சாரம் பாய்ந்து வாடிக்கையாளா் காயமடைந்தாா்.
கோவை சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியாா் துணிக்கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலங்கார விளக்குகளால் அலக்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை துணி வாங்குவதற்காக கடைக்கு வந்த குரும்பபாளையம் பகுதியை சோ்ந்த தமிழ்மாறன் (21) என்ற வாலிபா், கடையில் இரண்டாவது தளத்தில் இருந்த போது , அங்கு இருந்த அலங்கார விளக்கிளிருந்து மின்சாரம் பாய்ந்து காயமடைந்தாா்.
சம்பவம் தொடா்பாக தமிழ்மாறன் கொடுத்த புகாா் அடிப்படையில் போத்தனூா் போலீஸாா் கடை உரிமையாளா் ரவிசங்கா் மீது ஆபத்தை விளைவிக்ககூடிய வகையில் செயல்படுதல், உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.