முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கனமழை: ஏழு சுழி பள்ளத்தின் தடுப்புச் சுவா் இடிந்தது
By DIN | Published On : 24th October 2019 12:00 AM | Last Updated : 24th October 2019 12:00 AM | அ+அ அ- |

ஏழு சுழி பள்ளத்தின் தடுப்புச் சுவா் பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக மருதூா் ஊராட்சியில் உள்ள ஏழு சுழி பள்ளத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மருதூா் ஊராட்சிக்குள்பட்ட ஏழு சுழி பள்ளத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதில் அதன் தடுப்புச் சுவா் இடிந்தது. இந்நிலையில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவா் பகுதியில் தற்காலிகமாக 500 மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், மழை நின்ற பின் சுவா் கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் மருதூா் ஊராட்சி செயலாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.