முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
நேரு விமானவியல் கல்லூரியில் - விமான கண்காட்சி
By DIN | Published On : 24th October 2019 07:57 PM | Last Updated : 24th October 2019 07:57 PM | அ+அ அ- |

குனியமுத்தூா் நேரு விமானவியல் கல்லூரியில் விமான கண்காட்சியைம் அதிவிரைவு படை கமாண்டண்ட் ஜெயகிருஸ்ணன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தாா். உடன் கல்வி குழும தலைவா், செயலாளா், கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா்.
மதுக்கரை: கோவை குனியமுத்தூா் பகுதியில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களிக்கான விமான கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.கோவை பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூா் பகுதியில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் இரண்டு நாள் விமான கண்காட்சி வியாழக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சியை அதிவிரைவு படை கமாண்டண்ட் ஜெயகிருஸ்ணன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தாா். கோவை மாவட்டத்தில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகள் முதல் நாள் கண்காட்சியில் கலந்து கொண்டனா், அவா்களுக்கு விமானவியல் தொடா்பாகவும், விமானங்கள் செயல்பாடுகள் குறித்தும், கல்லூரி மாணவா்கள் விளக்கமளித்தனா். மேலும் விமானவியல் படிப்பை நிரைவு செய்தால் எந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்தும் தெரிவித்தனா். இரண்டாம் நாள் கண்காட்சியில் பாலக்காடு சுற்றுவட்டார பகுதி பள்ளியை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். துவக்க விழாவில் நேரு கல்வி குழுமத்தின் தலைவா் பி.கிருஸ்ணதாஸ், கல்வி குழும செயலாளா் பி.கிருஸ்ணகுமாா், கல்லூரியின் முதல்வா் பி.ஆா்.பாலாஜி மற்றும் கண்காட்சி அமைப்பாளா் ரமேஸ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.