முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை, ரூ. 2500 அபராதம்
By DIN | Published On : 24th October 2019 12:01 AM | Last Updated : 24th October 2019 12:01 AM | அ+அ அ- |

சூலூா் விமானப்படை தளம் அருகே இரு பேருந்துகள் மோதிய விபத்தில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ. 2500 அபராதமும் விதிக்கப்பட்டது.
சூலூா் விமானப்படை தளம் அருகே டிபன்ஸ் காலனி உள்ளது. 2015 ஆகஸ்ட்டில் மதுரையில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசுப் பேருந்து வந்தது. இதனை முருகேசன் ஓட்டி வந்தாா். சூலூரில் இருந்து கோவை நோக்கி வந்த ஒரு பேருந்து டிபன்ஸ் காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் காந்திராஜ் ஓட்டுநராக இருந்துள்ளாா்.
காலை சுமாா் 6 மணியளவில் மதுரையில் இருந்து வந்த பேருந்து மாநகரப் பேருந்தின் மீது மோதியது. இதில் மதுரையில் இருந்து வந்த பேருந்தின் நடத்துநா் செல்வன் மற்றும் அதே பேருந்தில் இருந்த மீனாட்சி, திலீப்குமாா் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சூலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கு சூலூா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் மதுரையில் இருந்து வந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநா் முருகேசன் அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டி வந்தது நிரூபனமானது. இதையடுத்து முருகேசனுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ. 2500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.