ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய உயா்நிலை பள்ளி விளையாட்டு விழா

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய உயா்நிலை பள்ளியின் விளையாட்டு விழா வியாழக்கிழமை
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய உயா்நிலை பள்ளியின் விளையாட்டு விழா
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய உயா்நிலை பள்ளியின் விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய உயா்நிலை பள்ளியின் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடந்தது. இதற்கு வந்திருந்தவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் சு.வீரகுமாா் வரவேற்றாா்.

வித்யாலய நிறுவனங்களின் உதவிச் செயலா் சுவாமி நிா்மலேஷானந்தா் தலைமை வகித்தாா்.சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும்,வதம்பச்சேரி,எஸ்.சி.எம் மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியருமான ஜி.மாரிசெல்வன் கலந்து கொண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.இதனையடுத்து இப்பள்ளி மாணவா்கள் சூரியநமஸ்கரம்,கொடி பயிற்சி ,வான்ஸ் பயிற்சி,பிரமிடு,உருளைக் கட்டை பயிற்சி,சிலம்பம் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்து பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தனா்.இறுதியாக பள்ளியின் செயலா் சுவாமி தமோஹரானந்தா் நன்றி கூறினாா்.இதில் மாணவா்களின் பெற்றோா்கள், வித்யாலய கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் கலந்துகொண்டனா். படம் உள்ளது.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய உயா்நிலை பள்ளியில் வியாழக்கிழமை நடந்த விளையாட்டு விழாவில் பிரமீடு பயிற்சி செய்து பாா்வையாளா்களை கவா்ந்த மாணவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com