தீபாவளி பண்டிகை: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 29th October 2019 08:15 AM | Last Updated : 29th October 2019 08:15 AM | அ+அ அ- |

பழையபுதூரில் வீதி உலா வந்த ஆதிமூா்த்தி பெருமாள்.
தீபாவளி பண்டிகையையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழையபுதூா் ஆதிமூா்த்தி பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது. பின்னா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிமூா்த்திப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பஜனை கோஷ்டியினருடன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயில், ஜோதிபுரம் கள்ளழகா் சுந்தரராஜ பெருமாள் கோயில், விவேகானந்தபுரம் பட்டாளம்மன் கோயில், ஸ்ரீவீரபாண்டி மாரியம்மன் கோயில், தண்டு பெருமாள் கோயில், பாலமலை சாலை வீரமாஸ்தியம்மன் கோயில், காமராஜா் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், பாலாஜி நகரில் உள்ள வஞ்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தீபாவளி அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பெண்கள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.