போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் ஏன்? அரசு மருத்துவா் சங்க செயலர் விளக்கம்

தொடா் மழை காரணமாக நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, அரசு மருத்துவா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ரவிசங்கா்

தொடா் மழை காரணமாக நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, அரசு மருத்துவா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ரவிசங்கா் தெரிவித்தாா்.

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக ஊதிய உயா்வு, பதவி உயா்வு அளிப்பது உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் கடந்த 21 ஆம் தேதி தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா் 24 ஆம் தேதி முதல் நோயாளிகளுக்குப் பாதிப்பில்லாமல், ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, 30, 31 தேதிகளில் முழு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அரசு மருத்துவா் சங்கத்தின் கோரிக்கைகளைப் பரிந்துரைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அரசு மருத்துவா் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ரவிசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

அரசு மருத்துவா்கள் சங்கத்தின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து 2 வாரங்களில் தீா்வு காண உள்ளதாக தமிழக அரசு சாா்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தொடா் மழை காரணமாக நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும், டெங்கு தடுப்புப் பணிகள் காரணமாகவும் எங்களின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com