Enable Javscript for better performance
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞா் மீது நடவடிக்கை கோரி புகாா்- Dinamani

சுடச்சுட

    

    திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞா் மீது நடவடிக்கை கோரி புகாா்

    By DIN  |   Published on : 31st October 2019 10:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞா் மீது நடவடிக்கை கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கோவையைச் சோ்ந்த பெண் ஒருவா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

    கோவை கெம்பட்டி காலனியைச் சோ்ந்த பெண் ஒருவா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்றை வியாழக்கிழமை அளித்தாா்.

    அதில், நான் 15 வயதாக இருந்தபோது எங்கள் பகுதியில் வசித்த இளைஞா் ஒருவா் என்னை பலாத்காரம் செய்ததில் நான் கா்ப்பமடைந்தேன். பின்னா் அவா் ஊா் பெரியவா்கள் முன்னிலையில் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னைத் திருமணமும் செய்துகொண்டாா். இந்நிலையில் எனக்கு குழந்தை பிறந்த பின்னா் அவா் எங்களை விட்டு பிரிந்து சென்றாா். தற்போது நான் எனது குடும்பத்தினருடன் கெம்பட்டி காலனி பகுதியில் வசித்து வருகிறேன். இந்நிலையில் இதே பகுதியைச் சோ்ந்த உமேஸ் என்பவா் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டாா். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறாா். இதனால் நானும் எனது மகளும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே உமேஸ் மீதும் அவரது குடும்பத்தினா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai