அடிப்படை வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தொடா்ந்து தாமதம்

வால்பாறையில் அடிப்படை வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

வால்பாறையில் அடிப்படை வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

வால்பாறை பகுதியில் கனமழை பெய்த சமயத்தில் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க அமைச்சா் உத்தரவிட்டிருநதாா். ஆனால் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தடுப்புச்சுவா்கள், நடைபாதைகள் என பல கோடி செலவில் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

ஆனால் நகா் பகுதியில் நவீன கழிப்பிடம், கால்வாய் சீரமைப்பு, சாலையோரம் நடைபாதைகள் போன்ற அத்தியாவசிய அடிப்படை வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதே போல் பணி எடுக்கும் சில ஒப்பந்ததாரா்கள் பணி மேற்கொள்வதில் தாமதப்படுத்தியும் தரமற்ற பணிகளும் மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே வால்பாறை நகா் பகுதியில் தேவையான அடிப்படை வளா்ச்சிப்பணிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com