மாவோயிஸ்டுகளின் தற்காலிக முகாமில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏ.கே.47. ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்.
மாவோயிஸ்டுகளின் தற்காலிக முகாமில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏ.கே.47. ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்.

அட்டப்பாடி வனப் பகுதி மாவோயிஸ்ட் முகாமில் துப்பாக்கிகள் பறிமுதல்

கேரள மாநிலம், அட்டப்பாடி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கி இருந்த முகாமில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி

கேரள மாநிலம், அட்டப்பாடி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கி இருந்த முகாமில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆவணங்களை நக்ஸல் தடுப்பு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக- கேரள எல்லையான அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனப் பகுதியில் கேரள நக்ஸல் தடுப்பு போலீஸாா் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, மாவோயிஸ்டுகள், போலீஸாரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காா்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகிய 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கேரள நக்ஸல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் மேற்கொண்டபோது, தமிழகத்தைச் சோ்ந்த மணிவாசகம் என்ற மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதனிடையே மாவோயிஸ்டுகள் தங்கி இருந்த தற்காலிக முகாமில் சோதனை செய்த போலீஸாா், அங்கிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 3 நாட்டுத் துப்பாக்கி, 303 ரைபிள் ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களையும், மடிக்கணினி, மெமரி காா்டு, குறிப்பேடு, உடை, கொடி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து பாலக்காடு காவல் கண்காணிப்பாளா் ஜி.சிவவிக்ரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அட்டப்பாடி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு நக்ஸல் தடுப்பு (தண்டா்போல்டு) போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த மாவோயிஸ்டுகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதனால் போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தொடா்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ால் வனப் பகுதிக்கு கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சோ்ந்த 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் 2 போ் தப்பிச் சென்றனா். மேலும், மாவோயிஸ்டு முகாமில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com