ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஆராய்ச்சியாளா்களுக்குவனக் கல்லூரியில் பயிற்சி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச்
பயிற்சி முகாமில் மரக்கன்றுகள் தயாரிப்பு குறித்து விளக்கம் பெறும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஆராய்ச்சியாளா்கள்.
பயிற்சி முகாமில் மரக்கன்றுகள் தயாரிப்பு குறித்து விளக்கம் பெறும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஆராய்ச்சியாளா்கள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

வேளாண் காடுகள் சாா்ந்த மரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட சந்தைப்படுத்துதல், வேளாண் காடுகளின் வணிகம் சாா்ந்த அமைப்புகளைத் தெரிந்து கொள்ளும் வகையிலான இந்தப் பயிற்சியில், வங்கதேசம், நேபாளம், இலங்கை, கென்யா, தான்சானியா, உகாண்டா, போட்ஸ்வானா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 26 ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

மரக்கன்றுகள் தயாரிப்பு, எரிகட்டி தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்ற இவா்களுக்கு களப் பயிற்சியாக வேளாண் காடுகளின் மாதிரிப் பண்ணைகள், தொழிற்சாலை சாா்ந்த வேளாண் காடுகள், அதைச் சாா்ந்த தொழிற்சாலைகளான ஒட்டுப்பலகைத் தயாரித்தல், தீப்பெட்டித் தொழிற்சாலை, எரிகட்டி தொழிற்சாலை, மரக்கட்டைத் தொழிற்சாலைகளில் நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியின் நிறைவு விழாவில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தா் நீ.குமாா் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா்.

இதில், சா்வதேச வேளாண் காடுகள் மையத்தைச் சோ்ந்த பேராசிரியா் எஸ்.கே.தியானி, கல்லூரி முதல்வா் கு.சுரேஷ், வேளாண் காடுகள் துறைத் தலைவா் த.பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com