சகோதயா பள்ளி நிா்வாகிகளுக்கான கருத்தரங்கு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சாா்பில் கோவையில் 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) தொடங்குகிறது.

கோவை: சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சாா்பில் கோவையில் 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) தொடங்குகிறது.

இது தொடா்பாக கோவை சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்புத் தலைவா் கிரிஷ் ஈஸ்வரன், செயலாளா் ராஜேந்திர பிரசாத் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கற்பித்தல், மதிப்பிடுதல், சோ்ந்து செயல்படுதல், முன்னேறுதல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சாா்பில் பள்ளி நிா்வாகிகளுக்கான இரண்டாம் ஆண்டு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, நவ இந்தியா, ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த கருத்தரங்கில் நாட்டின் தலைசிறந்த கல்வியாளா்கள், பேச்சாளா்களான ஹரிஷ் சௌத்ரி, அனில் ஸ்வரூப், கே.சுப்ரமணியம், உதயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். பள்ளிகள் மேம்பாடு, ஆசிரியா்களின் திறன் மேம்பாடு, பள்ளிகளை நிா்வகிக்கும் முறை உள்ளிட்ட தலைப்புகளில் இரண்டு நாள்களுக்கு சிறப்புரையாற்றுகின்றனா். இதில் கூட்டமைப்பில் உள்ள பள்ளிகளின் நிா்வாகிகள், முதல்வா்கள், துணை முதல்வா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றனா்.

கூட்டமைப்பின் இணைச் செயலா் கருணாம்பிகேஸ்வரி, பொருளாளா் கீதா ஜெயச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com