திலேப்பியா மீன் வளர்ப்பில் அதிக லாபம்

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 குறுகிய காலத்தில் வேகமாக வளரக் கூடிய "கிப்ட்' திலேப்பியா மீன் வளர்க்க இந்திய அரசின் நெறிமுறைகளைத் தொடர்ந்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறை அமைத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து திலேப்பியா மீன் பொரிப்பகம், இனப்பெருக்கம், பண்ணை வளர்ப்பு, வளர்ப்புத் தொட்டிகள் ஆகியவற்றை முறைப்படுத்திக் கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் இனத்துக்கு பிரத்யேக குணாதிசயங்கள் உள்ளன. அதிக இருப்பு அடர்த்தி, நோய் எதிர்ப்புத் திறன், குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி, அதிக வருமானம் போன்ற காரணங்களால் மீன் வளர்ப்போரிடையே இந்த இன மீன் குஞ்சுகள் தேவை அதிகரித்துள்ளது. 
 இதன் காரணமாக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் திலேப்பியா மீன் குஞ்சுப் பொரிப்பகம் நிறுவப்பட்டு, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல மதுரை மாவட்டத்திலும், அரசு உரிமம் பெற்ற தனியார் திலேப்பியா பண்ணையில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. 
 ஒரு ஏக்கருக்கு குறைவான பரப்பளவில் திலேப்பியா மீன் பண்ணை அமைப்பவர்கள், மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வுக்குப் பிறகும், ஒரு ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் அமைப்பவர்கள் பரிசீலனைக் குழு ஆய்வு, மாநில அளவிலான பரிந்துரைக்குப் பின் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
 திலேப்பியா மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், கோவை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக சேர கேட்டுக் கொள்ளப்படுகிறது. மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பின் மூலம் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடையும் மீன்களை வளர்த்து, அதிக லாபம் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 0424 - 2271912, 9655506422 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com