பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ரூ. 55.17 கோடியில் மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரூ. 55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரூ. 55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் விஜயகுமார், கோட்டாட்சியர் ரவிகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், தம்பு, சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ராஜா, தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூமி பூஜை செய்து பணியைத் துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரயில்பாதை குறுக்கிடும் பகுதியில் 810.25 மீட்டர் நீளத்துக்கு 16.20 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழித்தடங்கள் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் 257 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலையும், 779 மீட்டர் நீளத்துக்கு சேவை சாலையும் அமைக்கப்படும். 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைவதன் வாயிலாக பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ரயில்கள் வரும் நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com