சுடச்சுட

  

  மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். 
  வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றபோது, மதுபாட்டில் விற்பனை செய்ததாக டோபி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் (57) என்பவரைக் கைது செய்தனர். இதேபோல, புதுமார்கெட் பகுதி அம்மா உணவகம் அருகே மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சோலையாறு எஸ்டேட்டைச் சேர்ந்த கரீம் (48) என்பவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்த 69 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai