சுடச்சுட

  

  ரயிலில் பயணச் சீட்டு வாங்காமல் பயணம்: 8 மாதங்களில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

  By DIN  |   Published on : 12th September 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு, நடைமேடை சீட்டு வாங்காதவர்களிடம் இருந்து கடந்த 8 மாதங்களில் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
  கோவை ரயில் நிலையம் வழியாக தினமும் 73 ரயில்கள் சென்று வருகின்றன. 25 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில் நிலையத்துக்கு பயணிகளை வழியனுப்ப வரும் சிலர் நடைமேடை சீட்டு வாங்குவதில்லை என்றும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஏராளமான பயணிகள் பயணச் சீட்டு வாங்காமல் ரயில்களில் பயணித்து வருவதாகவும் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
  இதையடுத்து, சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட  ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பரிசோதகர்கள் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில், கோவை ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரையில் நடைமேடை சீட்டு வாங்காமலும், பயணச் சீட்டு இல்லாமலும் பயணம் மேற்கொண்டதாக 3,125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் பயணச் சீட்டு வாங்காதவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.2,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai