சுடச்சுட

  

  துடியலூரை அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.எல்.சிவகுமார் தலைமை வகித்தார். இதில் எழுத்தாளர் சூரியகாந்தன் கலந்து கொண்டு "பாரதி ஒரு ஞானக்கவி' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்களை பாடினர். இவர்களுக்கு சூர்யகாந்தன் தான் எழுதிய நூல்களை பரிசாக வழங்கினார். இறுதியில் கணிப்பொறியியல் துறை மாணவர் நா.சக்திவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai