கோவையில் கிரெடாய் சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி: செப்.13 முதல் 15 வரை நடக்கிறது

கிரெடாய் அமைப்பின் சார்பில் கோவையில் செப்டம்பர் 13 முதல் 15 ஆம் தேதி வரையில் மூன்று நாள் ரியல் எஸ்டேட் கண்காட்சி நடைபெற உள்ளது.

கிரெடாய் அமைப்பின் சார்பில் கோவையில் செப்டம்பர் 13 முதல் 15 ஆம் தேதி வரையில் மூன்று நாள் ரியல் எஸ்டேட் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கிரெடாய் அமைப்பின் கோவைப் பிரிவுத் தலைவர் சுரேந்தர் விட்டல் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்திய ரியல்  எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (இதஉஈஅஐ) 23 மாநிலங்களில், 156 நகரங்களில் இயங்கி வருகின்றன. இதில் 11,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஃபேர்புரோ என்பது கிரெடாய் கோவைப் பிரிவு சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ரியல் எஸ்டேட் கண்காட்சி ஆகும்.
இந்த ஆண்டு ஃபேர்புரோ-2019 என்ற பெயரில் நடைபெறுகிறது. வீடு வாங்குவோர், விற்போர் ஆகியோரை ஒரே கூரையின் கீழ் கொண்டு வர இந்தக் கண்காட்சி உதவும். இங்கு பட்ஜெட்டிற்கு ஏற்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீடுகள், வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய பகுதிகளில், தேவையான இடங்களில் கிடைப்பதுடன் உடனடி வங்கிக் கடன் பெறவும் இந்தக் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கண்காட்சி கோவையில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான வீடுகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும். கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் வரும் செப்டம்பர் 13 முதல் 15 வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது. 
இந்தக் கண்காட்சியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கிவைக்கிறார். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை உடனடியாக கடன் உதவி பெற ஒப்புதல் தருகின்றன. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்திலும் பயன்பெற முடியும். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி மூலம் சுமார் ரூ.150 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. மேலும், வீட்டுக் கடன்கள் மீது வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அப்போது, கண்காட்சித் தலைவர் டி.அபிஷேக், கிரெடாய் செயலாளர் ராஜீவ் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com