வெளிச் சந்தையில் கொப்பரை விலை உயர்வு:  அரசு கொள்முதல் மையத்துக்கு வரத்து குறைந்தது

வெளி சந்தைகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை வரத்து சரிந்துள்ளது. 

வெளி சந்தைகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை வரத்து சரிந்துள்ளது. 
தமிழகத்தில் 4.36 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.06 மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நிலையான விலையில்லாமல் அவ்வப்போது உயர்ந்தும், சரிந்தும் வருவதால் அரசே குறைந்தபட்ச விலை நிர்ணயித்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொப்பரை விலை சரியத் தொடங்கியது. கிலோ ரூ.100 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.80 ஆக சரிந்தது. இதனால், அரசு சார்பில் மீண்டும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 
அதன்படி, கடந்த ஜூன் மாதம் ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அரவைக் கொப்பரைக்கு ரூ.95.21, பந்துக்கொப்பரைக்கு ரூ.99.20 என அரசு விலை நிர்ணயித்தது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செஞ்சேரி, நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.
தவிர கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆனைமலை, திப்பம்பட்டி, பொள்ளாச்சி (தெற்கு) மற்றும் தெலுங்குபாளையம் உள்பட 6 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. ஆனால், அரசு சார்பில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டபின் வெளி சந்தைகளில் மீண்டும் கொப்பரை விலை உயரத் தொடங்கியது.
இதனால் அரசு கொள்முதல் மையங்களுக்கு கொப்பரை வரத்து சரிந்துள்ளது. கோவை  மாவட்டத்தில் 4 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 8.5 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கோவை விற்பனைக் குழுவின் முதுநிலை செயலாளர் கெளசல்யா மோகன் கூறுகையில், "விவசாயிகளின் நலன் கருதியே ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதக்கு கீழ் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், வியாபாரிகள் ஈரப்பதத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தவிர விலையும் ரூ.103 முதல் ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யவே விவசாயிகள் விரும்புகின்றனர், என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com