சுடச்சுட

  

  அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக மூன்று பெட்டிகள்

  By DIN  |   Published on : 13th September 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி மக்களவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.                                                                             
  பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாகப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதையடுத்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே பொதுமேலாளர் ராகுல்ஜெயின், மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai