சுடச்சுட

  

  சர்வதேச டுஷீன் தசைச் சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது.
  டுஷீன் தசைச் சிதைவு மரபணு பரிசோதனை, கலந்தாய்வு, பராமரிப்பு, ஆராய்ச்சிக்கான அமைப்பு (எம்.டி.சி.ஆர்.சி.) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, இந்திய அரியவகை நோய்களுக்கான அமைப்பின் நிறுவனர் பிரசன்னகுமார் தலைமை வகித்தார். இயற்கை சிகிச்சை நிபுணர் சுப்பிரமணியம் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். டுகெதர் அனிமேஷன் நிறுவனத்தின் டெஸ்மாண்ட் இமானுவேல் எபினேசர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
  முன்னதாக எம்.டி.சி.ஆர்.சி. அமைப்பின் தன்னார்வலர் லட்சுமி வரவேற்புரையாற்றினார். அவர் பேசும்போது, டுஷீன் தசைச் சிதைவு நோய் அரியவகை நோயாகக் கருதப்பட்டாலும் தமிழ்நாட்டில் அதிக அளவிலான குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மரபு வழியாக பரவும் நோய் என்றும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடிய நோய் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை. இருப்பினும் நோயை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் எம்.டி.சி.ஆர்.சி. சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
  இதில், டுஷீன் தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், பெற்றோருக்கான ஆலோசனைகள், விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai