சுடச்சுட

  

  வீட்டுச் சுவர்களை முட்டித் தள்ளிய யானைகள்: அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்

  By DIN  |   Published on : 13th September 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வால்பாறையில் எஸ்டேட்  பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
  கடந்த சில மாதங்களாக எஸ்டேட் பகுதியில் யானைகள் நடாமாட்டம் குறைந்திருந்தது. இருப்பினும் சில பகுதிகளுக்கு ஒற்றை யானை வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதிக்கு புதன்கிழமை நள்ளிரவு 7 யானைகள் வந்தன. இதை அறிந்த தொழிலாளர்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது குடியிருப்புப் பகுதிக்கு வந்த யானைகள் நான்கு வீடுகளின் சுவர்களை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. இதில் துர்காதேவி, அனிதா ஆகிய இரு தொழிலாளர்களின் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. 
  தகவல் கொடுத்து நீண்ட நேரமாகியும் வனத் துறையினர் வராததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் விடியவிடிய போராடி யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனர். மீண்டும் யானைகள் நடமாட்டம் துவங்கியுள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai