ஜவுளி, கைவினைப் பொருள்கள்கண்காட்சி தொடக்கம்

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் ஜவுளி, கைவினைப் பொருள்கள் கண்காட்சி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கியது.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் ஜவுளி, கைவினைப் பொருள்கள் கண்காட்சி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கியது.
 தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் தமிழ்நாடு கைவினைப் பொருள் கவுன்சில் சார்பில், சிருஷ்டி என்ற பெயரில் இந்தக் கண்காட்சி, விற்பனை நடைபெறுகிறது. இதில், பெண்களுக்கான மகேஸ்வரீஸ், சந்தரீஸ், காஞ்சிபுரம், பனாரஸ் பட்டு, பருத்தி சேலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சேலைகள், ஆண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், அரிய வகை நகைகள், பரிசுப் பொருள்கள், வீட்டு உபயோக, அலங்கார பொருள்கள், கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள் ஏராளமான அரங்குகளில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு கைவினைப் பொருள் கவுன்சில் தலைவர் ஜெய்ஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 
கண்காட்சியின் தலைவர் லட்சுமி ராமச்சந்திரன், செயலர் சுஜினி பால், பொருளாளர் மஞ்சுளா இளங்கோ உள்ளிட்ட கவுன்சில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி 14-ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com