Enable Javscript for better performance
இருவேறு சம்பவங்களில் 38 பவுன் நகைகள், கார் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    இருவேறு சம்பவங்களில் 38 பவுன் நகைகள், கார் திருட்டு

    By DIN  |   Published on : 14th September 2019 07:02 AM  |   அ+அ அ-   |    |  

    துடியலூர் பகுதியில் இருவேறு சம்பவங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகள், ஒரு கார் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கோவை, அப்பநாயக்கன்பாளையம் அருகே கேப்-டவுன் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (39). காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சில நாள்களுக்கு முன் குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். 
    இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.45ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
    இது குறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில், துடியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    இதேபோல, துடியலூர் அருகே வடமதுரையைச் சேர்ந்தவர் மோகன்சம்பத் (28). பொறியாளரான இவர் சில நாள்களுக்கு முன்பு வெளியூரில் வசிக்கும் தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் வியாழக்கிழமை மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
    இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த மூன்று பவுன் நகைகளும், வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மோகன்சம்பத் அளித்த புகாரின்பேரில், துடியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai