Enable Javscript for better performance
கல் அரைக்கும் கிரஷர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதியக் கட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    கல் அரைக்கும் கிரஷர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதியக் கட்டுப்பாடு

    By DIN  |   Published on : 14th September 2019 06:56 AM  |   அ+அ அ-   |    |  

    ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு கல் அரைக்கும் கிரஷர் இயந்திரம் மட்டுமே செயல்பட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதியக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
    தமிழகத்தில் ஆற்று மணல் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் செயற்கை மணல் எனப்படும் எம்- சாண்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கற்களை அரைத்து எம்-சாண்ட் தயாரிக்கும் கிரஷர்களின் எண்ணிக்கை சுமார் 300இல் இருந்து 1,500 ஆக அதிகரித்துள்ளது.
    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. புதிய கிரஷர்கள் தொடங்குவதற்கு ஏராளமானவர்கள் அனுமதி கேட்டு வருகின்றனர்.
    இந்த நிலையில், உரிய ஆய்வு நடத்தாமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய கிரஷர்களுக்கு அனுமதி வழங்கி வருவதாகவும், இதனால் காற்று மாசு அதிகரிப்பதாகவும் புகார்கள் எழுந்து வந்தன. இதனால், கிரஷர்கள் தொடங்குவதற்கு புதியக் கட்டுப்பாடுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு கிரஷர் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
    தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடங்கள், வழிபாட்டுத் தலங்களின் அருகில் கிரஷர்கள் தொடங்க அனுமதி வழங்கப்படாது. கிரஷர் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் அதிக அளவிலான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக மாசு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp