Enable Javscript for better performance
பெண்ணிடம்  18 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணிடம்  18 பவுன் திருட்டு

    By DIN  |   Published on : 14th September 2019 06:58 AM  |   அ+அ அ-   |    |  

    பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 18 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கோவையைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள் (47). இவர் கடந்த 1ஆம் தேதி உடுமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு பேருந்தில் வந்துள்ளார். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி தான் வைத்திருந்த கைப்பையைப் பார்த்தபோது, அதில் வைத்திருந்த 18 பவுன் நகை திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக போலீஸில் புகார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸில் வெள்ளிக்கிழமை அவர் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.                                                                           
    மூதாட்டியிடம் நகை பறிப்பு: பொள்ளாச்சியை அடுத்த வீரல்பட்டியைச் சேர்ந்தவர் மயிலாத்தாள் (75). இவர் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் முகவரி கேட்பதுபோல், அவரது அருகில் சென்று 5 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai