Enable Javscript for better performance
முகாசிசெம்சம்பட்டி வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    முகாசிசெம்சம்பட்டி வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 14th September 2019 07:00 AM  |   அ+அ அ-   |    |  

    அன்னூர் அருகே முகாசிசெம்சம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    அன்னூர் ஒன்றியம் வடவள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட முகாசிசெம்சம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான வீரமாத்தியம்மன் கோயில் மற்றும் சென்னியாண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தற்போது, புனரமைக்கப்பட்டு மகாகணபதி வேள்வி,  மகாலட்சுமி  வேள்வி, நவக்கிரக வேள்வியுடன் கும்பாபிஷேக விழா புதன்கிழமை துவங்கியது.
    மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, பூமாதேவி வழிபாடு, முளைபாலிகை இடுதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற்றன. இரவு 8 மணியளவில் முதல் கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 9 மணியளவில் மகா பூர்ணாஹுதி,  தீபாராதனை நடைபெற்றது. 
    12 ஆம் தேதி காலை 9 மணியளவில் இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது. 11  மணியளவில் கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து மகாதீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் மூன்றாம் கால வேள்வி நடைபெற்றது.
    13 ஆம் தேதி  காலை 5.30 மணியளவில் நான்காம் கால வேள்வி நடைபெற்றது. 7.45 மணியளவில் விநாயகர் மற்றும் சென்னியாண்டவர் கோயில் கோபுர கலசங்கள் மற்றும் வீரமாத்தியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு கருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
    தொடர்ந்து மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 
    இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    kattana sevai