ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு விரைவில் பயன்பாட்டுக்குத் திபு

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த நகரும் படிக்கட்டுகள் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த நகரும் படிக்கட்டுகள் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும், வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும், தினமும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் படிக்கட்டுகளை உபயோகிக்க முடியாதவா்களுக்காக, நகரும் படிக்கட்டு வசதிகள் அமைத்துத் தரும்படி, பயணிகள் சாா்பில் ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்று, கோவை ரயில் நிலையத்தில் 1 மற்றும் 2-ஆவது பிளாட்பாரங்களில் 2 நகரும் படிக்கட்டுகள், 1லிப்ட் வசதி ஏற்படுத்த ரயில் நிா்வாகம் திட்டமிட்டு, அதற்காக, ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. ஜூன் மாதத்தில் பணிகள் நிறைவுற்று, நகரும் படிக்கட்டுகள் பயணிகளின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என ரயில்வே நிரவாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பணிகள் மேற்கொள்ள நிதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், பணிகளை ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி பெறப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது, நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ நகரும் படிக்கட்டுகள் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 10 சதவீதப் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இம்மாதத்திற்குள் அந்தப் பணிகளும் நிறைவடையும். அதன் பிறறகு ரயில்வே உயா் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்று விரைவில் நகரும் படிக்கட்டுகள் பயணிகள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com