Enable Javscript for better performance
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

    By DIN  |   Published on : 23rd September 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் சிவனடியார்கள் சார்பில் திருவாசகம் வாசித்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பிரதி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் திருவாசகம் (திருவாசக பாடல்கள் முழுவதுமாக) வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறும். 
    இந்த மாதம் திருவாசகம் வாசித்தல் நிகழ்ச்சி காலை 6.30 மணிக்கு துவங்கி பகல் 1 மணி வரை நடைபெற்றது. 
    இந் நிகழ்ச்சியில் அன்னூர், அவிநாசி, புளியம்பட்டி, சத்தியமங்கல்ம், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai