அப்பநாயக்கன்பட்டியில் 3,600 மரக்கன்றுகள் நடவு

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து 3,600 மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனர். 

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து 3,600 மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனர். 
சூலூர் அருகே அப்பநாய்க்கன்பட்டியில் தாத்தன் குட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சிக்கும் வனம் அறக்கட்டளை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 
இந்த நிகழ்ச்சிக்கு சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கந்தசாமி தலைமை வகித்தார். கொடிசியா நிறுவனத் தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தார். சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா மரக்கன்றுகள் நட்டு துவக்கிவைத்தார்.
மேலும், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 3,600 மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த மரக்கன்றுகள் வளரும் வரையில் தண்ணீர் தருவதாக தனியார் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளனர். 
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் கந்தசாமி பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள 80 குட்டைகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com