Enable Javscript for better performance
கோவையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    By DIN  |   Published on : 25th September 2019 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பில்லூர் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவையில் சில பகுதிகளில் செப்டம்பர் 25, 26 ஆகிய 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். 
    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 
    பில்லூர் குடிநீர்த் திட்டத்தில் அவசரமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்  வரும் புதன்கிழமை (செப்டம்பர் 25), வியாழக்கிழமை (செப்டம்பர் 26 ) ஆகிய 2 நாள்களுக்கு காந்திபுரம், கணபதி, ரத்தினபுரி, சித்தாபுதூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காந்தி மாநகர், பீளமேடு, செளரிபாளையம், புலியகுளம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், ஜி.எம்.நகர், அல் அமீன் காலனி, பொன்விழா நகர், சாரமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளுக்கு 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai