Enable Javscript for better performance
தமிழகம் முழுவதும் ஒரே விதமான சொத்து வரி விதிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முழுவதும் ஒரே விதமான சொத்து வரி விதிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 25th September 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே விகிதத்தில் சொத்து வரி வசூலிக்க வேண்டும் என கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக அந்த அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் ஹர்மந்தர் சிங்கிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது: 
    கடந்த 1998 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே மாதிரியான சொத்து வரி வசூலிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. சென்னையில் பழைய சொத்து வரி வசூலிக்கப்பட்டது.
    இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் சொத்து வரி அதிகமாக வசூலிக்கப்படும் நிலையில், வரி குறைவாக விதிக்கப்படும் சென்னையில் வரி சீராய்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.  இதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், வணிகம், வர்த்தக நிறுவனங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
    இதில் சென்னையில் 1998 க்குப் பிறகு புதிததாக, குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதம் என புதிய வரி விதிப்பும், சென்னை தவிர மற்ற பகுதிகளில் 2008 இல் உயர்த்தப்பட்ட 25 சதவீதம் குடியிருப்பு சொத்து வரியுடன் 50 சதவீதம் சேர்த்து 75 சதவீதம் வரியும்,  வணிக நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட  100 சதவீதம் சொத்து வரியுடன் 100 சதவீதம் சேர்த்து 200 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் தற்போது வசூலிக்கப்படும் 2,500 குடியிருப்பு வரியானது மற்ற மாவட்டங்களில் ரூ.3,750 ஆக வசூலிக்கப்படுகிறது. சென்னையில் தற்போது வசூலிக்கப்படும் வணிக நிறுவனங்களுக்கான ரூ.10,000 சொத்து வரியானது, மற்ற மாவட்டங்களில் ரூ.20,000 என இரட்டிப்பாகி உள்ளது.
    வரும் ஆண்டுகளில் இதே விகிதத்தில் சொத்து வரி நிர்ணயிக்கும்போது, சென்னையை விட பன்மடங்கு வரியை மற்ற மாவட்ட மக்கள் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே மாதிரியான சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai