Enable Javscript for better performance
மில் உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மதிப்புள்ள அரிசியைப் பெற்று மோசடி செய்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மில் உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மதிப்புள்ள அரிசியைப் பெற்று மோசடி செய்தவர் கைது

    By DIN  |   Published on : 25th September 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையைச் சேர்ந்த மில் உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மதிப்புள்ள அரிசியை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    சேலம், ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் ரைஸ் மில் நடத்தி வருகிறேன். கோவை, மேட்டுப்பாளையம் சாலை ஹோஸ்மின் நகரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஏ.எஸ்.குமார் என்பவர் என்னிடம் நம்பிக்கையாக பேசி மொத்தமாக ரூ. 9 லட்சத்துக்கு அரிசி வாங்கிவிட்டு உடனடியாக பணம் தருவதாகக் கூறி பாதித் தொகையை கொடுத்துவிட்டு மீதி தொகையை கொடுக்காமல் காசோலையைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். எனவே அவரைக் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும், பொருளையும் மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
    இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவான ஏ.எஸ்.குமாரைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில்(எண்.2) ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai