சூலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சூலூரில் சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

சூலூரில் சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
சூலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட  பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அடைத்து துர்நாற்றம் வீசுவதாகவும், கழிவுகள் தேங்கி நிற்பதாகவும் சூலூர் பேரூராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 
இதைத் தொடர்ந்து சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் நேரில் சென்று அந்த இடங்களை பார்வையிட்டார்.  அப்போது அப்பகுதியில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்ற உத்தரவிட்டார். 
இதுகுறித்து செயல் அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது: 
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் படி சம்பந்தப்பட்ட நபர்களிடம் கடந்த மாதம் தெரிவித்திருந்தோம். ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கடை கழிவு நீர் சீராக செல்ல முடியாத வகையில் சாலையை மறைத்து பலர் கடைகள் கட்டியுள்ளனர். இதனால் பருவ மழை காலத்தில் சாக்கடை நீரானது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்படும். எனவே சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன என்றார்.
கட்டும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com