செப்டம்பர் 27 இல் முழு அடைப்பு  போராட்டம்: மக்கள் ஆதரவு வேண்டும்: கோவை எம்.பி. கோரிக்கை

தனியாரிடம் குடிநீர் விநியோக உரிமை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவையில் செப்டம்பர் 27 ஆம் தேதி

தனியாரிடம் குடிநீர் விநியோக உரிமை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவையில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமாக கோவையில் எப்போதும் இல்லாத அளவு தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம், தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. 
கோவை மாநகராட்சி குடியிருப்புகள், தொழில்நிறுவனங்கள், வணிக கட்டடங்களுக்கு 100 முதல் 200 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வை குறைக்கக்கோரி, அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் குடிநீர்க் கட்டணம் உயரும். பொதுக்குழாய்கள் அகற்றப்படும். வீட்டில் உள்ள குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீரை சேமிக்க கூடாது என்கின்ற நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 
இந்நிலையில், குடிநீர் உரிமையை பாதுகாப்பது, அநியாய சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து செப்டம்பர் 27 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. எனவே, இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com