தீபாவளி: பட்டாசுக் கடைகள் அமைக்க செப்டம்பர் 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஊரகப் பகுதிகளில் தற்காலிகப் பட்டாசுக் கடைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஊரகப் பகுதிகளில் தற்காலிகப் பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தற்காலிகப் பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புபவர்கள், வெடிபொருள்கள் சட்டவிதிகள் 2008 இன் படி மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும். ஒற்றை சாளர முறையில் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று வருவாய் நிர்வாக அணையர் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெற உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்காலிகப் பட்டாசுக் கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com