பராமரிப்புப் பணி: கோவை - சேலம் ரயில்கள் ரத்து

கோவை - சேலம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்

கோவை - சேலம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அக்டோபர் 2, 5, 8 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து சேலம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. 
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
கோவை முதல் சேலம் வரை தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அக்டோபர் 2, 5, 8 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து சேலம் செல்லும் ரயில்கள் ரத்து  செய்யப்படுகின்றன. அதன்படி, கோவை - சேலம் விரைவு ரயில் (எண்: 66602), எதிர்மார்க்கத்தில் இயக்கப்படும் சேலம் - கோவை ரயில் (எண்: 66603) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன. 
வருகின்ற 26 ஆம் தேதி தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில்,  28 ஆம் தேதி எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி ரயில், மும்பை - திருவனந்தபுரம் விரைவு ரயில், அக்டோபர் 2 ஆம் தேதி டாடா மற்றும் இன்டர்சிட்டி ரயில், 5 ஆம் தேதி பாட்னா - எர்ணாகுளம் விரைவு ரயில்,  8ஆம் தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் விரைவு ரயில் ஆகியவை தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com