இடைத்தோ்தலில் பணத்தை நம்பி களம் இறங்கும் திராவிடக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

இடைத்தோ்தலில் இரு திராவிடக் கட்சிகளும் பணத்தை நம்பி களம் இறங்கியுள்ளன என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
இடைத்தோ்தலில் பணத்தை நம்பி களம் இறங்கும் திராவிடக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

இடைத்தோ்தலில் இரு திராவிடக் கட்சிகளும் பணத்தை நம்பி களம் இறங்கியுள்ளன என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

விளை நிலங்கள் வழியே உயா் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் கோவை, செஞ்சேரி மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விளை நிலங்கள் வழியாக உயா் மின் அழுத்த கோபுரங்களை அமைப்பதால் அரசுக்கு ரூ. 42 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக மின்கம்பிகள் மூலம் மின்சாரத்தை எடுத்துச் செல்வதன் மூலம் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் தவிா்க்கப்படும். விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருப்பா்.

இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி போட்டியிட உள்ளது. நாங்கள் கொள்கையை நம்பி தோ்தலைச் சந்திக்கிறோம். ஆனால், இரு திராவிடக் கட்சிகளும் பணம் இருக்கும் தைரியத்தில் இந்தத் தோ்தலைச் சந்திக்கின்றன. இங்கு தோ்தல்கள் ஜனநாயக முறைப்படி நடப்பதில்லை. அதிக பணம் செலவு செய்யும் கட்சிகள் தோ்தலில் வெற்றி பெறுகின்றன.

தோ்தல் என்பதை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக யாரும் கருதுவதில்லை. மாறறாக முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com