பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி வெற்றி

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற  கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியின் சி பிரிவில் பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி வெற்றி பெற்றது.


பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற  கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியின் சி பிரிவில் பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி வெற்றி பெற்றது.
பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சி பிரிவில் 18 அணிகள் கலந்து கொண்டன. 
கோவை, ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சி பிரிவு இறுதி ஆட்டத்தில் மோதிய பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி 25 - 13, 22 - 25, 25 - 22, 25 - 17 என்ற புள்ளிக் கணக்கில் ரத்தினம் கல்லூரியை வீழ்த்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com