வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசம்

கோவையில் மாநகர காவல் துறை சாôர்பில், வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசங்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறை இயக்குநர் பிரதீப்.வி.பிலிப், சனிக்கிழமை வழங்கினார். 


கோவையில் மாநகர காவல் துறை சாôர்பில், வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசங்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறை இயக்குநர் பிரதீப்.வி.பிலிப், சனிக்கிழமை வழங்கினார். 
கோவை மாநகரக் காவல் துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து கோவையில் வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசங்களை சனிக்கிழமை வழங்கினர். கோவை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். போக்குவரத்து துணை ஆணையர் இளங்கோ, கோவை மாவட்ட அரிமா சங்க ஆளுநர் கர்ணபூபதி, கோவை மாநகர  சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் கார்த்திகேயன், அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறை இயக்குநர் பிரதீப்.வி.பிலிப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தலைக்கவசம் அணியும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவதைக் கடைபிடிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலமாக பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றார். 
நிகழ்ச்சியில் மகளிர் உள்பட 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விலையில்லாத் தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன .  உதவிப் போக்குவரத்து ஆணையர்கள் சரவணன், ராஜ்கண்ணா, போக்குவரத்து ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com