சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செட்டித்திருக்கோணம் கிராமத்தில் சேறும் சகதியுமான தெருவில் நாற்று நடும் கிராம மக்கள்.
செட்டித்திருக்கோணம் கிராமத்தில் சேறும் சகதியுமான தெருவில் நாற்று நடும் கிராம மக்கள்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது தொடா் மழையின் காரணமாக இக்கிராமத்திலுள்ள அங்காடித்தெரு மற்றும் தெற்குத் தெருவிலுள்ள சாலைகள் சேறு சகதியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமமடைகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து, மேற்கண்ட தெருவில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு சாலையில் நாற்றுகளை நட்டு தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா். தகவலறிந்து சென்ற அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிராம மக்களிடம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com