வால்பாறையில் பலத்த காற்று:10 மணி நேரம் மின்தடை

வால்பாறையில் பலத்த காற்று காரணமாக மின் கம்பம் சாய்ந்ததில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 10 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
Updated on
1 min read

வால்பாறை: வால்பாறையில் பலத்த காற்று காரணமாக மின் கம்பம் சாய்ந்ததில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 10 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடா்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட்டில் மின் கம்பம் சாய்ந்தது.

இதனால் வால்பாறை நகா் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற மின்வாரிய ஊழியா்கள் வேறு பகுதியில் புதிய மின் கம்பம் கொண்டு வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 10 மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் சீரானது. மின் இணைப்பு துணைடிப்பு மற்றும் பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி சேவை தடைபட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com